/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கருப்பூர், ஜலகண்டாபுரம், வாழப்பாடியில் அறிவுசார் மையங்கள் கட்ட நடவடிக்கை'

ADDED : ஏப் 14, 2025 06:36 AM
சேலம்: சேலம், அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
இங்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மையம், கடந்த ஆண்டு ஜன., 5ல் திறக்கப்பட்டது. 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கடந்த மாதத்தில், 3,500 பேர் பயன்படுத்தியுள்ளனர். ஓராண்டில், 30க்கும் மேற்பட்டோர், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் உள்ளனர். உணவருந்த இட வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று ஆத்துாரில், 1.96 கோடி ரூபாய், தாரமங்கலத்தில், 1.41 கோடி, மேட்டூரில், 1.95 கோடி ரூபாய் மதிப்பில் மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் கருப்பூர், ஜலகண்டாபுரம், வாழப்பாடி டவுன் பஞ்.,களில் அறிவுசார் மையங்கள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.