/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.10 கோடி நிலம் மீட்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை
/
ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.10 கோடி நிலம் மீட்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.10 கோடி நிலம் மீட்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.10 கோடி நிலம் மீட்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை
ADDED : ஜன 30, 2025 05:15 AM
ஆத்துார்: நகராட்சி மயானம் அருகே, 4 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்-புகளை, போலீஸ் பாதுகாப்புடன், அதிகாரிகள் அகற்றி, 10 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை மீட்டனர். அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டையில், நகராட்சி மயானம் உள்ளது. அதன் அருகே, 4 ஏக்கர் நிலம், 20 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனால் ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் தலைமையில், தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்-புடன், 'பொக்லைன்' வாகனங்கள் உதவியுடன், 3 பேர் ஆக்கிர-மிப்பு செய்திருந்த நிலத்தில், தென்னை மரம், வாழை, மக்காச்-சோளம், 3 விவசாய கிணறுகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
இதுகுறித்து கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறியதாவது: ஆத்துார் நகராட்சியில், 62 இடங்கள், நரசிங்கபுரம் நகராட்சியில், 12 இடங்களில் இருந்து, வசிஷ்ட நதியில் கழிவுநீர் கலப்பதாக கண்டறியப்பட்டது. அந்த கழிவுநீரை, நதியில் விடாமல் சுத்திக-ரித்து, விவசாயத்துக்கு பயன்படுத்த, அரசுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டது. 2024 - 25ல், 15வது மத்திய நிதிக்குழு திட்-டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இடம் தேர்வு செய்ய, நகராட்சி மயான நிலத்தில் ஆய்வு செய்த-போது, அப்துல்கரீம் என்பவர், 77 சென்ட்; ராஜ்கணேசன், 2.14 ஏக்கர்; அருண்குமார், 1.19 ஏக்கர் என, 4.01 ஏக்கர் ஆக்கிரமிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது, 10 கோடி ரூபாய் மதிப்பில், அந்த, 4 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். அங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. தினமும் வசிஷ்ட நதியில் கலக்கும், 12.05(125 லட்சம் லிட்டர்) எம்.எல்.டி., கழிவுநீரை குழாய் வழியே கொண்டு சென்று சுத்திகரித்து, 85 சத-வீத அளவுக்கு, விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் வழங்கப்-படும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுதும் முடிந்த பின், இத்-திட்டப்பணி தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

