/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
/
'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
'சாயப்பட்டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'
ADDED : டிச 05, 2025 10:51 AM
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், 880 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா கட்ட நடவடிக்கை எடுக்-கப்பட்டு வருகிறது.
அதேநேரம், 55 சாயப்பட்டறைகள் அமைக்கப்-படுவதாக கூறி, அப்பகுதி விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நி-லையில் நேற்று, அப்பகுதியில், பா.ஜ.,வின் விவ-சாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆய்வு செய்து, அப்பகுதி விவசாயிகள், மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து நாகராஜ் அளித்த பேட்டி:
இப்பகுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் மட்டுமின்றி, குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும். குடிநீர் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு தொழிலை பெருக்க நினைக்கிறது.
ஆனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்படி சாயப்பட்டறை அமைக்கக்கூடாது. இதுதொடர்-பாக இங்குள்ள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்றால், அவர்கள் இல்லை. கலெக்டர் உள்-ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கருத்து கேட்ட பின்னர் மத்திய அரசிடம் தெரிவித்து, சாயப்பட்-டறை கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

