/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
/
பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
ADDED : மே 13, 2025 02:37 AM
ஓமலுார் :ஓமலுார் அருகே, தொளசம்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த காற்றால், தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அரசமரத்து விநாயகர் கோவிலில் இருந்த, 300 ஆண்டு பழமையான அரசமரம் கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. மரக்கிளைகள் அதன் அருகில் இருந்த மின் கம்பங்கள் மீது விழுந்ததில், அருகே அடுத்தடுத்து தேர் செல்லும் ராஜவீதியில் இருந்த, ஒன்பது மின்கம்பங்கள் முறிந்து சேதமானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சேதமானதையடுத்து, அப்பகுதி முழுதும் இருட்டாக மாறியது. கீழே சாய்ந்த மரத்தினை அகற்றி, மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.