/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் பலத்த காற்று மரம், மின்கம்பம் சாய்ந்தன
/
ஏற்காட்டில் பலத்த காற்று மரம், மின்கம்பம் சாய்ந்தன
ஏற்காட்டில் பலத்த காற்று மரம், மின்கம்பம் சாய்ந்தன
ஏற்காட்டில் பலத்த காற்று மரம், மின்கம்பம் சாய்ந்தன
ADDED : செப் 03, 2025 02:29 AM
ஏற்காடு,ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், பலத்த காற்று வீசியது. இதில் இரவு, 9:30 மணிக்கு, நாகலுார் மலை கிராம சாலையில், பொட்டானிக்கல் கார்டன் அருகே, சவுக்கு மரம் வேரோடு சாய்ந்து. ஏற்காடு தீயணைப்புத்துறையினர், போலீசார், அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
நேற்று காலையும் பலத்த காற்று தொடர்ந்தது. இதனால் காலை, 8:00 மணிக்கு ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே மின்கம்பம் சாய்ந்து கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் அந்த வழியே பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். பின் மின் ஊழியர்கள், கம்பத்தை சரி செய்த பின், போக்குவரத்து தொடங்கியது.