/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி வேனுக்குள் அடிதடி மாணவர் பலி: ஒருவர் கைது
/
பள்ளி வேனுக்குள் அடிதடி மாணவர் பலி: ஒருவர் கைது
ADDED : பிப் 12, 2025 01:22 AM
இடைப்பாடி:பள்ளி வேனில் மோதிக்கொண்ட இரு மாணவர்களில், ஒருவர் உயிரிழந்தார்; சக மாணவன் கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி, தாவாந்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து, 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. டிரைவர் ரித்திகுமார், 25, என்பவர் வேனை ஓட்டினார்.
வெள்ளாண்டிவலசில் சென்றபோது, வேனுக்குள் இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான, 14 வயதுடைய இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவர், மற்றொருவரான கந்தகுரு என்ற மாணவனை, வேனில் இருந்த கம்பி மீது இடித்து, கழுத்தை நெரித்துள்ளார்.
இதில், மயக்கமடைந்த கந்தகுருவை, டிரைவர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவ nமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கந்தகுரு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இடைப்பாடி போலீசார் விசாரித்து, மாணவன் மரணத்திற்கு காரணமான சக மாணவனை கைது செய்தனர். தொடர்ந்து, அந்த மாணவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர்.
நேற்று தைப்பூசத்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையிலும், இந்த மாணவர்கள் படித்த பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.