/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் கல்லுாரி பஸ் மோதி மாணவருக்கு கால் முறிவு
/
தனியார் கல்லுாரி பஸ் மோதி மாணவருக்கு கால் முறிவு
ADDED : டிச 24, 2024 02:08 AM
கெங்கவல்லி, டிச. 24-
தனியார் கல்லுாரி பஸ், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், மாணவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கெங்கவல்லி அருகே, கூடமலை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஹரீஷ், 19. கோவை தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அவரது தம்பியுமான, 17 வயது பிளஸ் 2 மாணவர் நேற்று, ஹீரோ பவர் பைக்கில், கூடமலையில் இருந்து, கெங்கவல்லி நோக்கி சென்றனர். அப்போது, கெங்கவல்லியில் இருந்து கூடமலை வழியாக, ராசிபுரத்துக்கு சென்ற தனியார் கல்லுாரி பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கில் வந்த மாணவர் ஹரிஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவருடன் வந்த தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.