/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் மாணவ பேரவை பதவியேற்பு விழா
/
'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் மாணவ பேரவை பதவியேற்பு விழா
'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் மாணவ பேரவை பதவியேற்பு விழா
'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸில் மாணவ பேரவை பதவியேற்பு விழா
ADDED : செப் 22, 2025 01:33 AM
சேலம்:சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, மாணவ பேரவை, பல்வேறு அமைப்புகளுக்கான தொடக்க விழா, அதன் மாணவ உறுப்பினர் பதவியேற்பு விழா நடந்தது.
மாணவ பேரவை மற்றும் கல்லுாரியின் பல்வேறு அமைப்புகளான நாட்டு நல பணித்திட்டம், சுற்றுச்சூழல் அமைப்பு, நுண்கலை அமைப்பு, செஞ்சுருள் சங்கம், இளைஞர் நல அமைப்பு, பாலின உணர்திறன், சாலை பாதுகாப்பு அமைப்பு, பூமி அமைப்பு போன்றவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ உறுப்பினர்களுக்கு, டீன் செந்தில்குமார், 'பேட்ஜ்' அணிவிக்க, பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவ உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி, பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.