நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குமாரசாமி கோட்டையை சேர்ந்த தங்கவேல் மகன் கிரிதரன், 21.
சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், பி.இ., சிவில், 4ம் ஆண்டு படித்த இவர், அதன் விடுதியில் தங்கியிருந்தார். அவரது பெற்றோர், நேற்று மொபைலில் தொடர்பு கொண்டபோது, அவர் பேசவில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள், பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து பார்த்தனர். அப்போது மாணவரின் அறை கதவு திறந்திறந்தது. ஆனால் கழிப்பறை கதவு உட்புறம் தாழிடப்பட்டு தொடர்ந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்து, கதவை உடைத்தனர். உள்ளே இயற்கை உபாதை கழிக்கும்படி அமர்ந்த நிலையில் மாணவர் இறந்து கிடந்தார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.