/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவர் பலி
/
மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவர் பலி
ADDED : மார் 08, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், சோளம்பள்ளம், வீரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மனோஜ்குமார், 20. இவர், மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், 2ம் ஆண்டு, கணினி அறிவியல் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, சேலம், செவ்வாய்ப்பேட்டை மேம்பாலத்தில், டி.வி.எஸ்., 'செஸ்ட்' மொபட்டில் சென்றபோது திடீரென, 'பிரேக்' பிடித்ததில் நிலை தடுமாறி, மனோஜ்குமார் கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். செவ்வாய்ப்பேட்டை போலீசார்
விசாரிக்கின்றனர்.

