ADDED : டிச 30, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி, சற்று மனவ-ளர்ச்சி குன்றியவர். இவர் சில நாட்களுக்கு முன் வாந்தி எடுத்-ததால், அவரை பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்-றனர்.
அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து பெற்றோர் புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசா-ரித்ததில், வெள்ளார் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரண், 22, காரணம் என தெரிந்தது. 'போக்சோ' வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

