/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவிக்கு கத்திக்குத்து காதலித்தவருக்கு 'காப்பு'
/
மாணவிக்கு கத்திக்குத்து காதலித்தவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 30, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், இனாம் பைரோஜியை சேர்ந்தவர் மோகனபிரியன், 23. இவர் மின்னாம்பள்ளியை சேர்ந்த, 21 வயது கல்லுாரி மாணவியுடன், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகியுள்ளார். அவரை காதலிப்பதாக கூறி, மோகனப்பிரியன் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 15ல், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த மாணவியை, மோகனபிரியன் கத்தியால் குத்திவிட்டு, அவரது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோகனபிரியன் நேற்று குணமடைந்ததால், அவரை, போலீசார் கைது செய்தனர். மாணவி, சிகிச்சையில் உள்ளார்.

