/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்
/
ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்
ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்
ஓட்டப்பந்தயத்தில் மெடல்கள் வாங்கிய மாணவி உதவி கேட்டு மனு வழங்கல்
ADDED : நவ 04, 2025 01:49 AM
சேலம், ஓட்டப்பந்தயத்தில், 20க்கும் மேற்பட்ட மெடல்களை வாங்கியுள்ள மாணவி நிஷாந்தினி, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற உதவி செய்யக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
சேலம் மாரமங்கலத்துப்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த பொன்னுசாமி மகள் நிஷாந்தினி, சூரமங்கலத்தில் உள்ள புனிதமேரி பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று, ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற்ற, 20க்கும் மேற்பட்ட மெடல்களை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், மாவட்ட அளவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட 100, 200, 400 மற்றும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பரிசு
பெற்றுள்ளேன்.
மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க, வெளியூர்களுக்கு சென்று வரும் அளவுக்கு வசதி இல்லை. எனவே நிதி உதவி அல்லது விளையாட்டுத்துறை சார்பில் கலந்து கொள்ள உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.