/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி
/
குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி
குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி
குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி
ADDED : பிப் 04, 2025 06:36 AM
சேலம்: குத்துச்சண்டை போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவியை கமிஷனர் பாராட்-டினார்.மயிலாடுதுறையில், பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த, 28 முதல் 31 வரை நடந்தது.
இதில், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சேலம், குகை அரசு மகளிர் மேல்-நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி எபியா, 76 முதல் 81 கிலோ எடை பிரிவில், திறமையை வெளிப்படுத்தி
முதலிடம் பிடித்தார். அவருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி எபியா, பயிற்சியாளர் அருள்முருகன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவை சந்தித்து வாழ்த்து
பெற்றனர்.