/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அரசு பள்ளிகளில் படித்தோர் சாதனையாளராக உயர்ந்துள்ளனர்'
/
'அரசு பள்ளிகளில் படித்தோர் சாதனையாளராக உயர்ந்துள்ளனர்'
'அரசு பள்ளிகளில் படித்தோர் சாதனையாளராக உயர்ந்துள்ளனர்'
'அரசு பள்ளிகளில் படித்தோர் சாதனையாளராக உயர்ந்துள்ளனர்'
ADDED : ஆக 22, 2024 03:50 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார். அதில் துணை கலெக்டர் சக்திவேல் பேசியதாவது:
நானும் இதே பள்ளியில் படித்து தற்போது துணை கலெக்டராக பணிபுரிகிறேன். இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி, சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்டோர், அரசு பள்ளிகளில் படித்து தான் சாதனையாளராக உயர்ந்துள்ளனர். அவர்களின் தகவல்களை படித்தால் மாணவர்களுக்கு பயனாக இருக்கும். அனைத்து துறைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கேற்ப படித்து வேலைக்கு செல்ல வேண்டும். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற பொது அறிவு, அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். குறிக்கோள் இருந்தால் மாணவர்கள், சோதனைகளை வென்று சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆசிரிய பயிற்றுனர் தனலட்சுமி, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் அன்பரசன், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.