/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பையால் துர்நாற்றம்: மாணவ, மாணவியர் அவதி
/
குப்பையால் துர்நாற்றம்: மாணவ, மாணவியர் அவதி
ADDED : பிப் 28, 2025 07:00 AM
பனமரத்துப்பட்டி: சேலம், தாசநாயக்கன்பட்டியில், மேற்கு பகுதி சர்வீஸ் சாலையோரம், ஜருகுமலை மழைநீர் ஓடையில் குப்பை, இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் நச்சு உள்ளிட்டவை கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அடிக்கடி குப்பைக்கு தீ வைக்கப்படுவதால் கரும்புகை எழுந்து, அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதனால் பள்ளி முன் குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி, தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில், 2024 நவம்பரில், பனமரத்துப்பட்டி பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால் மாணவ, மாணவியர், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'இரவில் மாநகராட்சி பகுதியில் இருந்து குப்பையை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டி விடுகின்றனர். அங்கே இருந்த குப்பை அகற்றப்பட்டது. மீண்டும் இரவில் கொட்டுகின்றனர். அதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

