ADDED : அக் 11, 2025 01:01 AM
ஓமலுார், தர்மபுரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏற்காட்டுக்கு சுற்றுலா வரும் பயணியர், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுார், கண்ணப்பாடி வழியே கொலவூர் சென்று ஏற்காடு செல்கின்றனர்.
அப்படி செல்லும் மாலைப்பாதையில், வனப்பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சேதமாகியுள்ளது. அச்சாலையை மேம்படுத்துவது தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று, மலைப்பாதையில் ஆய்வு செய்தனர்.
பின் கணவாய்புதுாருக்கு ஒன்றிய சாலை அமைத்தல்; வனப்பகுதி சாலையை, 5.5 கி.மீ., என, கண்ணப்பாடி வரையும், 2ம் கட்டமாக, கண்ணப்பாடியில் இருந்து, நாகலுார் வழியே ஏற்காடு செல்லவும் திட்டமிடப்பட்டது. அதற்கான சாத்தியக்கூறு குறித்து கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளனர்.
எம்.பி.,க்கள் சிவலிங்கம், செல்வகணபதி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி, காடையாம்பட்டி ஒன்றிய செயலர் அறிவழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.