/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு
/
சொக்கநாதர் கோவில் நந்தவன ஆக்கிரமிப்பை அகற்ற ஆய்வு
ADDED : அக் 04, 2024 03:06 AM
மேட்டூர்: மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே, மேட்டூர் மேற்கு நெடுஞ்சாலையோரம் மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுத-பாணி கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்-கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை சார்பில், 2.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கு பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றிய நிலையில் தற்போது வளாகத்தில், 40 சென்ட் நிலம் மட்டும் உள்ளது. அதன் அருகே, 18 சென்ட் நந்தவன நிலத்தை, தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரிந்தது. இதனால் அறநிலையத்துறை சேலம் உதவி கமிஷனர் ராஜா, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், செயல் அலுவலர் மாதேசன் ஆகியோர் நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை பார்வையிட்டு எல்லை கற்கள் நட்டனர். மேலும் வரும் நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்-றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

