/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சார் பதிவாளர் ஆபீஸ் கட்ட நில அளவீடு
/
சார் பதிவாளர் ஆபீஸ் கட்ட நில அளவீடு
ADDED : பிப் 07, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூரில், 40 ஆண்டுக்கு மேலாக சார் - பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதனால் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட, அரசு, 2.60 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இதனால் மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் உள்ள காலி நிலத்தில், நீர்வளத்துறை ஊழியர்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். நேற்று சேலம் நகர ஊர-மைப்பு உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்(கட்-டடம்), பொறியாளர் குழுவினர், தேர்வு செய்யப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர். விரைவில் அங்கு கட்டுமானப்-பணி தொடங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

