/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்
/
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம்
ADDED : ஆக 24, 2025 01:46 AM
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குனர் மணிவாசகம் அறிக்கை:மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தனிப்பட்ட பட்டா
தாரர், 2 ஆண்டுக்கு மேலாக பயிரிடாமல் தரிசாக வைத்துள்ள விவசாய நிலங்களை, மீண்டும் விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.
தனிநபர் விவசாயிகளின் தரிசு நிலங்களில் புதர் நீக்கி சமன் செய்து உழுது பயிர் சாகுபடி செய்ய, ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய்- மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சம், 2 ஹெக்டேர், அதாவது, 5 ஏக்கர் வரை, இப்படி தரிசாக பயிரிடாமல் வைத்துள்ள விவசாய நிலத்தை விளைநிலமாக மாற்ற விண்ணப்பிக்கலாம்.
நடப்பு, 2025 - -26ம் ஆண்டுக்கு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்ணாபுரம், காளிகவுண்டம்பாளையம் ஊராட்சிகளில், சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் வரப்பு பயிராக பயறு வகை பயிர்களை பயிரிட, பயறு விதைகள், 300 -ரூபாய் மானியத்தில் வழங்கப்படு
கிறது.
மண்வளத்தை மேம்
படுத்த உயிர் உரங்கள், 1.5 லிட்டர், 450 ரூபாய் -மானியத்தில் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, அப்பகுதி உதவி வேளாண் அலுவலர்களையோ அல்லது மகுடஞ்சாவடி வேளாண் துறை அலுவலகத்தையோ அணுகலாம்.

