/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கவனச்சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி'
/
'கவனச்சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி'
'கவனச்சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி'
'கவனச்சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி'
ADDED : மே 09, 2024 06:47 AM
ஓமலுார் : பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டு, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி, ஓமலுார் அருகே பத்மவாணி கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
படிப்புகள் என்னென்ன, கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வு, வழிகாட்டல் ஆகியவை, தலைசிறந்த கல்வியாளர்கள் மூலம் இங்கு வழங்கப்படுகிறது. தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். 'நான் முதல்வன்' திட்டத்தில், கல்லுாரி கனவு திட்டம் மாணவர்களுக்கு பயனாக அமையும். கடந்த ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த, 22,805 மாணவர்கள், கல்லுாரி கனவு வாயிலாக பயன் பெற்றுள்ளனர்.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் டிப்ளமா, பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளில் படித்த, 82,837 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 160 அரசு பள்ளிகளில் இருந்து, 1,450 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். மன உறுதியுடன் கவன சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி. முன்னேறி வரும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., மேனகா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.