ADDED : டிச 13, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, பெட் பெட் சாலையை, 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அச்சாலையில் ஸ்டோன் பார்க் அருகே, நேற்று மதியம், 12:00 மணிக்கு, திடீரென, 3 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் செல்லா-ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அருகே கடை வைத்திருந்த ஒருவர், பள்ளத்தை சுற்றி பிளக்ஸ் போர்டு வைத்து, நெடுஞ்-சாலை துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற அதிகாரிகள், பள்ளத்தை பார்வையிட்டு, எம்.சாண்ட் மூட்டைகளை நிரப்பி, தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

