/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை
/
சாக்கடையின்றி அவதி: நடவடிக்கை தேவை
ADDED : டிச 22, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, டிச. 22--
இரும்பாலை விரிவாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மகுடஞ்சாவடி, கே.கே.நகரில், 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் மக்கள், வீடு கட்டி உள்ளனர். ஆனால் எந்த தெருவிலும் சாக்கடை வசதி அமைத்து தரப்படவில்லை. இதனால் மக்கள், வீடுகள் அருகே கழிவுநீரை தேக்கி வைப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அதனால் இப்பகுதியில் கழிவு நீர் சாக்கடை கால்வாய் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.