/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட கரும்புகள்
/
வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட கரும்புகள்
ADDED : ஜன 08, 2025 07:01 AM
இடைப்பாடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில் கரும்புகளை, சேலம் உள்பட, 8 மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்துள்ளனர்.
குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பூலாம்பட்டி, கூடக்கல், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகளை கொள்முதல் செய்தனர். அந்த கரும்புகளை விவசாயிகள் வெட்டி கட்டி வைத்தனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம், அந்தந்த மாவட்டங்களுக்கு கரும்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.