sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுருக்கமுறை திருத்த முகாம் நிறைவு: 84,620 படிவங்கள் குவிந்-தன

/

சுருக்கமுறை திருத்த முகாம் நிறைவு: 84,620 படிவங்கள் குவிந்-தன

சுருக்கமுறை திருத்த முகாம் நிறைவு: 84,620 படிவங்கள் குவிந்-தன

சுருக்கமுறை திருத்த முகாம் நிறைவு: 84,620 படிவங்கள் குவிந்-தன


ADDED : நவ 25, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று முடிந்த, 4வது முகாமுடன் சேர்த்து இதுவரை மொத்தம், 84,620 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும், 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி-யடைவோர், பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது. கடந்த அக்., 29ல் தொடங்கிய பணி, வரும், 28 வரை நடக்கிறது. அதை செம்-மைப்படுத்த, சிறப்பு, 4வது முகாம், 1,269 மையங்களில், 3,264 ஓட்டுச்சாவடிகளில் தனித்தனியே நேற்று நடந்தது. அதில் பெயர் சேர்க்க, 12,019 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் அதிகபட்சமாக சேலம் மேற்கில், 1,510, குறைந்த-பட்சம் இடைப்பாடியில், 753 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்-ளன. நீக்கம் செய்ய, 4,710, குடியிருப்பு மாற்றம், பட்டியலில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைக்கு, 10,601 பேர் என, 27,330 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

தொகுதி வாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்ப விபரம்:

கெங்கவல்லி - 1,707; ஆத்துார் - 2,387; ஏற்காடு - 2,887; ஓமலுார் - 2,138; மேட்டூர் - 1,944; இடைப்பாடி - 2,172; சங்-ககிரி - 2,083; சேலம் மேற்கு - 2,958; வடக்கு - 3,390; தெற்கு - 2,711; வீரபாண்டி - 2,953 மனுக்கள் முறையே, 27,330 விண்-ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஏற்கனவே நடந்த, 3 சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, 42,411 பேர், நீக்கம் செய்ய, 12,229, குடியிருப்பு மாற்றம், பட்டியலில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைக்கு, 29,980 பேர் படிவம் தாக்கல் செய்துள்ளனர். இத்துடன் சேர்த்து, 4 முகாம்களில் மொத்தம், 84,620 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தொடர்ந்து வரும், 28 வரை மனுக்கள் பெறப்படுகின்றன. 2025 ஜன., 6ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us