/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேராசிரியர் உள்பட 5 பேருக்கு 'சம்மன்'
/
பேராசிரியர் உள்பட 5 பேருக்கு 'சம்மன்'
ADDED : ஜன 04, 2024 11:53 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல்(பொ), கணினி அறிவியல் துறை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர், 'பூட்டர் பவுண்டேஷன்' பெயரில் தனியார் நிறுவனத்தை தொடங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு பெரியார் பல்கலை உளவியல் துறை முனைவர் ஜெயக்குமார், 49, பொருளியல் துறைத்
தலைவர் ஜெயராமன், மேலாண் கல்வி துறை பேராசிரியர் சுப்ரமணியபாரதி, விலங்கியல் துறை முனைவர் நரேஷ்குமார், 39, தொகுப்பூதிய பணியாளர் தண்டீஸ்வரன், 43, ஆகியோர், ஜன., 4ல்(இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் நேற்று, 'சம்மன்' அனுப்பியுள்ளார்.