தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லிங்கம் மீது சூரிய ஒளி

லிங்கம் மீது சூரிய ஒளி

லிங்கம் மீது சூரிய ஒளி


ADDED : பிப் 23, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தில், பிப்., 21 முதல் மார்ச், 6 வரை சூரியஒளி படும். அதன்படி நேற்று முன்தினம் காலை, லிங்கத்தின் ஒரு பகுதியில் சூரியஒளி தென்பட்டது. நேற்று காலை, லிங்கம் மீது முழுமையாக சூரிய ஒளி பட்டு மின்னியது. தொடர்ந்து சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2ம் நாளும் ஏமாற்றம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிப்., 21, 22, 23ல் சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும். நேற்று முன்தினம் மேக மூட்டத்தால் ஒளி விழும் நிகழ்வை பார்க்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று மாலை, பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். மேகமூட்டம் இருந்தபோதும், மின்விளக்கு அணைக்கப்பட்டு பக்தர்கள் காத்திருத்தனர். 6:00 மணிக்கு சூரிய ஒளி, கருவறை நந்தி வரை வந்தது. பக்தர்கள் ஆர்வமாக பார்க்க முயன்று, ஒளியை மறைத்தனர். இதனால் சுவாமி மீது ஒளி தென்படவில்லை. பின் விளக்குகள் போடப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us