தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விடுதி மொட்டை மாடியில் மேற்பார்வையாளர் தற்கொலை

விடுதி மொட்டை மாடியில் மேற்பார்வையாளர் தற்கொலை

விடுதி மொட்டை மாடியில் மேற்பார்வையாளர் தற்கொலை


ADDED : ஜூலை 08, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:தங்கும் விடுதி மொட்டை மாடியில் அதன் மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கொளத்துார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ், 43. சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில், மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.

இவரது மனைவி இறந்ததால், இரண்டாவதாக சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு, சேலம், அழகாபுரம் பெரியபுதுாரில் வசித்தார்.

அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

வீட்டு செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. இதில் மனமுடைந்த சாந்தி, மகள், மகனுடன் கொளத்துார் சென்றுவிட்டார்.

வேதனையில் இருந்த தர்மராஜ், நேற்று முன்தினம் இரவு, அவர் பணிபுரியும் விடுதியின் மொட்டை மாடியில், ஊழியர்கள் தங்கும் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அஸ்தம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us