/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கெட்டுப்போனதற்கு பதில் தரமான முட்டை வினியோகம்
/
கெட்டுப்போனதற்கு பதில் தரமான முட்டை வினியோகம்
ADDED : ஆக 07, 2024 07:38 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார், காவேரிபுரம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் முட்டை வினியோகிக்கப்பட்டது. அதில், 49 முட்டைகள் கெட்டுப்போனது தெரிந்தது.
இதனால் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. அதேபோல் கொளத்துார் ஒன்றியத்தில் பல பள்ளிகளுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகித்திருப்பது தெரிந்தது. அந்த முட்டைகளை திரும்ப பெற்று புது முட்டைகள் வழங்க ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஒன்றிய கமிஷனர் அண்ணாதுரை தெரிவித்தார். இதுகுறித்த செய்தி காலைக்கதிரில் வெளியானது.
அதைத்தொடர்ந்து ஒன்றியங்களுக்கு முட்டை வினியோகிக்கும் செல்வா என்பவர், நேற்று காவேரிபுரம், கருங்கல்லுார், கொளத்துார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு சென்றார். நேற்று முன்தினம் வினியோகித்த, கெட்டுப்போன முட்டைகளுக்கு பதில் புதிதாக தரமான முட்டைகளை வழங்கினார்.இதுகுறித்து செல்வா கூறுகையில், ''கொளத்துார் ஒன்றிய பள்ளிகளுக்கு முட்டை வினியோகித்த சோமு என்பவரை இடமாற்றம் செய்து ஜான் என்பவரை நியமித்துள்ளோம். வழங்கும் முட்டைகளில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்,'' என்றார்.