/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
/
விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
ADDED : ஏப் 12, 2024 07:12 AM
சேலம் : நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள், சேலம், நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை நேற்று சந்தித்தனர்.
அப்போது, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.தொடர்ந்து வேலுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்ததால், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., - பா.ஜ.,வை சேர்ந்த, 40 வேட்பாளர்களை தோற்கடிக்க செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாநில பொதுச்செயலர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஷ் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

