/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு
/
முள்ளுவாடி கேட்டில் 2வது பாலம் கட்ட ஆய்வு
ADDED : ஆக 29, 2025 01:29 AM
சேலம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில், இரு ரயில்வே கேட்டுகள் இருந்தன. போக்குவரத்து நெரிசலால் இரு மேம்பாலங்கள் கட்ட, மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. முதலாவது கேட் மேம்பால பணி, 2016ல் தொடங்கப்பட்டபோதும், நீதிமன்ற வழக்கால் தாமதமாகி, 2024ல் தான் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
செரி ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டுக்கான மேம்பாலம் அமைக்க, முன்கூட்டியே நிலம் எடுப்பு நடவடிக்கை தொடங்கியது. 2024 பிப்ரவரியில், பாலத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிந்தது. ஆனாலும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சேலம் ரயில்வே கோட்ட கட்டுமான பிரிவு அலுவலர்கள், முள்ளுவாடி கேட் பகுதியில் ஆய்வு நடத்தினர். துாண்கள் அமைக்கும் இடங்கள், நிலத்தடியில் உள்ள கேபிள்கள் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்தனர்.

