/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்துறையினரை தாக்கிய வி.சி., பிரமுகர் 'சஸ்பெண்ட்'
/
வனத்துறையினரை தாக்கிய வி.சி., பிரமுகர் 'சஸ்பெண்ட்'
வனத்துறையினரை தாக்கிய வி.சி., பிரமுகர் 'சஸ்பெண்ட்'
வனத்துறையினரை தாக்கிய வி.சி., பிரமுகர் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 16, 2024 01:56 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
கடந்த, 11ல், ஆத்துார் வி.சி., ஒன்றிய செயலர் ராஜிவ்காந்தி, 40, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை செயலர் நேசத்தமிழன், 42, உள்ளிட்டோர் இரண்டு கார்களில் முட்டல் ஏரிக்கு சென்றனர்.
நுழைவு சீட்டு வாங்க மறுத்து, வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து, வனவர் முருகேசன் அளித்த புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார், ஒன்றிய செயலர் ராஜிவ்காந்தி, நிர்வாகி நேசத்தமிழன் ஆகியோர் மீது, எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், வி.சி., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பையா நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ராஜிவ்காந்தி நடந்து கொண்ட செயல், கட்சிக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் உள்ளதால், கட்சி தலைமை உத்தரவுபடி, ஆறு மாதத்திற்கு, அவர் வகித்த பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இவருடன், கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என கூறியுள்ளார்.