/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தேகத்தால் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது
/
சந்தேகத்தால் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது
சந்தேகத்தால் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது
சந்தேகத்தால் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டியவர் கைது
ADDED : பிப் 15, 2024 10:22 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி, அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, லாரி டிரைவர் கோபி, 27. இவர் பழக்காரன்காட்டில் நீலவேணி என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கிறார். நீலவேணி, தேவூர் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், 38, என்பவருடன் வாழ்கிறார். செட்டிப்பட்டியை சேர்ந்த கோவிந்தனுக்கு சொந்தமான வாகனங்களில், டிப்பர் லாரி டிரைவராக கோபி, 'ஹிட்டாச்சி' டிரைவராக ரமேஷ் பணிபுரிகின்றனர்.
நீலவேணியுடன் கோவிந்தன் பழகியுள்ளார். இதனால் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு, இடைப்பாடி - குமாரபாளையம் சாலை, சோழீஸ்வரர் கோவில் பிரிவில் உள்ள பாலத்தின் மீது கோபி, கோவிந்தன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த ரமேஷ், 'என் மனைவியுடன் பழகுகிறீர்களா' என கேட்டு அரிவாளால் தாக்கியுள்ளார்.
கோவிந்தன் தப்பி ஓடிவிட்டார். கோபியின் கை, தலை மீது அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கிருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்ததும் ரமேஷ் ஓடிவிட்டார். படுகாயமடைந்த கோபி, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி தேவூர் போலீசார், ரமேஷை நேற்று கைது செய்தனர்.

