/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ப்பை கொட்டப்படுவதை தடுக்க சுவாமி படங்கள்
/
ப்பை கொட்டப்படுவதை தடுக்க சுவாமி படங்கள்
ADDED : பிப் 16, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், மணியனுாரில், தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே குப்பை கொட்டப்படுவதை தடுக்க, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், முதலில் விநாயகர் படத்துடன் 'பேனர்' அடித்து வைத்தனர். அதை மீறி, மக்கள் குப்பை கொட்டினர். இதனால் குப்பைக் குவியல் அருகே சாலைகளில் வரிசையாக, சுவாமிகளின் படங்களை வைத்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையறிந்த அன்னதானப்பட்டி போலீசார், பிள்ளையார் படத்துடன் கூடிய பேனர், 10 சுவாமி படங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் சுவாமி படங்களை தெருவில் வைத்தது யார் என விசாரிக்கின்றனர்.