/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலம் ஆக்கிரமிப்பாளர்களுடன் தாசில்தார் ஆலோசனை
/
நிலம் ஆக்கிரமிப்பாளர்களுடன் தாசில்தார் ஆலோசனை
ADDED : நவ 19, 2024 01:40 AM
நிலம் ஆக்கிரமிப்பாளர்களுடன்
தாசில்தார் ஆலோசனை
ஓமலுார், நவ. 19--
காடையாம்பட்டி தாலுகா காருவள்ளியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் நிலத்தில், குறிப்பிட்ட சர்வே நம்பரில், 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளது, அவற்றை அகற்றிட வேண்டும் என சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், ஹிந்து சமய அறநிலையத்
துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மனைகளையும், கட்டட பகுதிகளையும் குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வரும் நபர்களை, வாடகைதாரர்களாக வரன்முறைபடுத்தி, 12 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அதன்படி, நேற்று கோவில் வளாகத்தில் காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன், கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஹிந்து சமய அறநிலைய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.