/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஐ.,யை சிறைபிடித்த தலேமா தொழிலாளர்கள்
/
எஸ்.எஸ்.ஐ.,யை சிறைபிடித்த தலேமா தொழிலாளர்கள்
ADDED : ஆக 09, 2025 01:10 AM
சேலம், சேலம், புது ரோடு, 'தலேமா' எலக்ட்ரானிக் நிறுவனம் மூடப்பட்டதால், 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், அந்த நிறுவனத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, 1 முதல், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, பா.ம.க., வை சேர்ந்த, எம்.எல்.ஏ., அருள் சந்தித்து, பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச்சென்றார்.
பின் தொழிலாளர்களிடம், உளவுப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., ராஜசேகர், பேச்சு நடத்தினார். அப்போது, நிறுவனத்துக்கு ஆதரவாக பேசியதாக கூறி, தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் எஸ்.எஸ்.ஐ., அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் பெண்கள், அவரை, செக்யூரிட்டி அறையில் அமரவைத்து சிறை
பிடித்து, கோஷம் எழுப்பினர். பின் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பேச்சு நடத்திய பின், அவரை விடுவித்தனர்.