/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வண்டிப்பாதை ஒதுக்குமாறு கூறி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
/
வண்டிப்பாதை ஒதுக்குமாறு கூறி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
வண்டிப்பாதை ஒதுக்குமாறு கூறி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
வண்டிப்பாதை ஒதுக்குமாறு கூறி தாலுகா அலுவலகத்தை முற்றுகை
ADDED : டிச 07, 2024 07:17 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீடு, தோட்டத்துக்கு சேர்ந்து, நத்தம் புறம்போக்கு இடத்தை வண்டி பாதையாக பயன்-படுத்தி வந்துள்ளார். சில தினங்களுக்கு
முன் வண்டிப்பாதையை அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பு செய்தனர்.முன்னதாக பெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் வண்டிப்பாதையை மீட்டெடுத்து,
பெரு-மாளுக்கு பயன்படுத்த அளவீடு செய்து தரும்படி, வருவாய் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தரவை அமல்படுத்த வருவாய் துறையினர் சர்வே செய்ய சென்றபோது, கிராம மக்கள் ஒன்று கூடி, கோவிலுக்கு
சொந்த-மான நிலம் எனக்கூறி தடுத்தனர். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன், வண்டிப்பாதையை ஆக்கிரமித்து
கட்டடமும் கட்டினர். இதனால் அவர் வீட்டுக்கும், தோட்டத்துக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் பாதை ஒதுக்கி தரக்கோரி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு,
20க்கு மேற்பட்டோருடன் நேற்று வந்த பெருமாள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தாசில்தார்
கவியரசு, வருவாய் துறையினர். அந்தியூர் போலீசாருடன், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கரட்டுப்பாளையம் சென்றனர்.
இதையறிந்து, 50க்கும் மேற்பட்டோர், வருவாய் துறையினரை தடுத்து ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன்
அதிகாரிகள் பேச்சுவார்த்-தையில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலகத்தில் பெருமாள் தலை-மையிலான அவரது உறவினர்கள்
இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.