/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரோந்தில் சிக்கிய தாம்பரம் வாலிபர் 12 மொபைல், 2 லேப்டாப் மீட்பு
/
ரோந்தில் சிக்கிய தாம்பரம் வாலிபர் 12 மொபைல், 2 லேப்டாப் மீட்பு
ரோந்தில் சிக்கிய தாம்பரம் வாலிபர் 12 மொபைல், 2 லேப்டாப் மீட்பு
ரோந்தில் சிக்கிய தாம்பரம் வாலிபர் 12 மொபைல், 2 லேப்டாப் மீட்பு
ADDED : ஜூலை 16, 2025 01:48 AM
ஆட்டையாம்பட்டி, ஜூலை 16
சீரகாபாடியில் உள்ள தனியார் கல்லுாரியில், கோவையை சேர்ந்த கௌசிக்கேஷன், 19, படிக்கிறார். இவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவரது அறையில், கடந்த ஏப்., 14 இரவு, லேப்டாப், மொபைல் போன் திருடுபோனது. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்ததில், 2 பேர் திருடியது தெரிந்தது. அதில் சேலம், மணியனுாரை சேர்ந்த ரிஷிகேஷ், 38, என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடி
வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, ராக்கிப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காபி பார் முன், சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து அவரது பையை சோதனை செய்ததில், மொபைல் போன், லேப்டாப் இருந்தது.
விசாரணையில், சென்னை, தாம்பரத்தை சேர்ந்த மேகநாதன் 37, என்பதும், அவரது நண்பர் ரிஷிகேஷூடன் சேர்ந்து திருடி வந்ததும் தெரிந்தது. மொபைல் போன், லேப்டாப்பை விற்க வந்தபோது சிக்கியதும் தெரிந்தது. மேலும் பையில் இருந்த, 12 மொபைல் போன்கள், இரு லேப்டாப்களை கைப்பற்றினர். காஞ்சிபுரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திருட்டு வழக்குகள் இருப்பதும், விசாரணையில் தெரிந்தது. பின் மேகநாதனை, போலீசார் கைது செய்தனர்.

