/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு தமிழக வணிகர் சங்க பேரமைப்பு முடிவு

ADDED : மார் 18, 2024 03:19 AM
சேலம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சேலம் மண்டல கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார்.
அதில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வணிகர்கள் பணப்பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாய் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள்
தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
பின் தலைவர் விக்கிரமராஜா,
நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலுக்கு தேசிய தலைவர்களின் சிலைகளை மறைக்க கூடாது. பறக்கும் படையினர், வாகன சோதனையின்போது வணிகர்களிடம் முறையாக ஆவணம் இருந்தால் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது. அப்படி செய்தால், 24 மணி நேரத்துக்குள் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
வாகன தணிக்கை மட்டுமின்றி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் தேர்தல் பறக்கும் படையினர் தடுக்க வேண்டும். அனைத்து கட்சியினரிடமும், வணிகர்களின் கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் கட்சிக்கு தான் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.