/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 01:33 AM
ஓமலுார், போலி ஆவணம் மற்றும் கிரயம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காடையாம்பட்டி தாலுகா, மூக்கனுார் கிராமத்தில் மூன்று நபர்களுக்கு சொந்தமான நிலத்தை, ஒருவர் பெயருக்கும், கஞ்நாயக்கன்பட்டி கிராமத்தில், 5 பேருக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் பெயருக்கும் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, பட்டா வழங்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், நேற்று காலை காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன், போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டத்தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறையை கண்டித்து ஒரு மணி நேரம் கோஷமிட்டனர். இதில், 70 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிவில் தாலுகா அலுவலகத்திலும், சார்பதிவாளர் அலுவலகத்திலும் மனு வழங்கினர்.