/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜே.எஸ்.டபுள்யு.,வை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கல்
/
ஜே.எஸ்.டபுள்யு.,வை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கல்
ஜே.எஸ்.டபுள்யு.,வை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கல்
ஜே.எஸ்.டபுள்யு.,வை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கல்
ADDED : நவ 28, 2025 01:05 AM
மேட்டூர், கடந்த, 1958ல் நிறுவப்பட்ட, மேச்சேரி பொது நுாலகத்துக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் சென்று படிக்கின்றனர். 41,105 புத்தகங்கள், 5,940 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் போதிய இருக்கைகள், மின்சாரம், காற்றோட்டம் இல்லாததால், மாணவர்கள் நீண்ட நேரம் தங்கி படிக்க முடியாமல் பல்வேறு சிரமங்களை
சந்தித்தனர்.இதுகுறித்து நுாலக நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, பொட்டனேரி ஜே.எஸ்.டபுள்யு., நிறுவனம், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில், நுாலக கட்டட சீரமைப்பு, இருக்கை, அலமாரிகள், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை உருவாக்கியது. தொடர்ந்து நுாலகத்துக்கு செல்லும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் சமூக முன்னேற்றத்துக்கு, ஜே.எஸ்.டபுள்யு., ஆலையின் பங்களிப்பை பாராட்டி, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், விருது வழங்கி
கவுரவித்தார்.