/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 01:07 AM
சேலம், டிச. 20-
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுதாகர், இணை செயலாளர் தமிழரசன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாநில துணைத் தலைவர் முருகேசன் கூறுகையில்,''களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பணிகளுக்கு கால
நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது, பெரும் பணி சுமையை சுமத்துவதை கைவிட வேண்டும், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஜன., 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் திருவேரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.