/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்
/
சுற்றுலா பயணியர் வருகையில் தமிழகம் 2ம் இடம்
ADDED : ஜன 26, 2025 07:39 AM
சேலம்: ''ஓராண்டில் மட்டும் தமிழகத்துக்கு, 28.40 கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். இது, இந்திய அளவில் இரண்டாம் இடம்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சேலத்தில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தின், 300 சுற்றுலா தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த, சுற்றுலா பெருந்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் தமிழகத்துக்கு, 28.40 கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். இது, இந்திய அளவில் இரண்டாம் இடம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மட்டும் 9.63 லட்சம் பேர் வந்துள்ளனர். இது, இந்திய அளவில் ஆறாம் இடம். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மாமல்லபுரம், திருச்சி உட்பட சுற்றுலா தலங்களுக்கு பயணியர் அதிகம் வருகின்றனர்.
ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் துவங்க ஆய்வு நடக்கிறது. ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

