/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதுப்பொலிவுடன் தனிஷ்க் ஜூவல்லரி திறப்பு
/
புதுப்பொலிவுடன் தனிஷ்க் ஜூவல்லரி திறப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:01 AM
சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள டாடா நிறுவனத்தின், 'தனிஷ்க் ஜுவல்லரி' விரிவு படுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடந்தது. 'டைட்டன்' நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடராமன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து தனிஷ்க்கின் நகைகள் பிரிவின், தமிழகம், கேரளம் சர்க்கிள் பிசினஸ் ஹெட் நரசிம்மன் குத்துவிளக்கு ஏற்றினார்.
இதுகுறித்து சேலம் தனிஷ்க் ஜூவல்லரி பங்கு தாரர்கள் ஆனந்த்குமார், பாலகுமார், ரமேஷ் கூறியதாவது: சேலம் தனிஷ்க் ஷோரூமுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. இப்போது, 6,000 சதுரடியில், சேலம் தனிஷ்க் ஜூவல்லரி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திறப்பு விழாவை ஒட்டி, வாடிக்கையாளர் வாங்கும் ஒவ்வொரு நகைக்கும், தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை, வரும், 27 வரை மட்டுமே. இதில் வாடிக்கையாளர்கள், நாட்டின் எந்த நிறுவனத்தில் வாங்கிய பழைய நகைகளையும், தனிஷ்க்-கில் மாற்றிக்கொள்ளலாம். சாதாரண தங்க நகை வாங்க கூடுதலாக, 1 கேரட் மதிப்பீட்டையும், வைர நகை வாங்க கூடுதலாக, 2 கேரட் மதிப்பீட்டையும் பெறலாம்.
இச்சலுகை, வரும், 30 வரை செல்லும்.மேலும் தனிஷ்க், அதன், 'ரிவா கோல்டன் அட்வான்டேஜ்' திட்டம் மூலம் சேமிக்க, ஒரு சிறந்த வழியை செய்துள்ளது. இந்த திட்டம், 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் நிலவும் விகிதத்தில் தங்கத்தை சேர்த்து வைக்கவும், விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உதவுகிறது. காலக்கெடு முடிவில், நீங்கள் நகை வாங்கும்போது, 50 சதவீதம் வரை செய்கூலி, கட்டண சலுகைகளை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.