/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் புகுந்த டேங்கர் லாரி: துாங்கிக்கொண்டிருந்த 4 பேர் காயம்
/
வீட்டில் புகுந்த டேங்கர் லாரி: துாங்கிக்கொண்டிருந்த 4 பேர் காயம்
வீட்டில் புகுந்த டேங்கர் லாரி: துாங்கிக்கொண்டிருந்த 4 பேர் காயம்
வீட்டில் புகுந்த டேங்கர் லாரி: துாங்கிக்கொண்டிருந்த 4 பேர் காயம்
ADDED : மே 10, 2024 07:33 AM
ஆத்துார் : நரசிங்கபுரம், வடக்கு தில்லை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
மணிவிழுந்தானை சேர்ந்த டிரைவர் அழகுதுரை, 32, சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கி, டேங்கர் லாரியை ஓட்டி வந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு, கட்டுப்பாட்டை இழந்த லாரி, செந்தில்குமார் வீட்டின் சுவரில் மோதியது. தொடர்ந்து சுவரை உடைத்து உள்ளே சென்றது. இதில் துாங்கிக்கொண்டிருந்த செந்தில்குமார், அவரது மனைவி உமாசெல்வி, 38, மகன் சஞ்சய், 14, மகள் ரூபி, 12, ஆகியோர் காயம் அடைந்தனர். மக்கள் அவர்களை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சஞ்சய்க்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அதேபோல் அங்குள்ள பாலம் அருகே டிரைவரும் காயம் அடைந்த நிலையில் படுத்திருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரணையில், போதையில் லாரியை ஓட்டிவந்தது தெரியவர, அழகுதுரையை கைது செய்தனர்.