/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1.60 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்ய இலக்கு
/
1.60 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்ய இலக்கு
ADDED : ஆக 20, 2025 01:30 AM
ஓமலுார், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில், 24 ஏக்கரில், அரசு தென்னை நாற்றுப்பண்ணை செயல்
படுகிறது. அங்கு நாட்டு இனமான அரசம்பட்டி நெட்டை ரகம், அதிக மகசூல் தரக்கூடிய நெட்டை குட்டை ரகம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாகவும், தோட்டக்கலைத்துறை மூலமும் விற்கப்படுகிறது.
அங்கு நடப்பு, 2025 - 26க்கு, 1.20 லட்சம் நெட்டை ரகம், 40,000 நெட்டை, குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து பண்ணை மேலாளர் ஸ்ரீவித்யா கூறியதாவது: தற்போது நாற்றுகள் பெறப்பட்டு, முதல் நிலை நாற்றங்கால்(மணல் பதனம்) பகுதியில் பராமரிக்கப்படுகிறது. ஒரு கன்று, 5 அல்லது 6 மாதங்களில் விற்பனைக்கு தயாராகிவிடும். பின் விற்பனை குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.