/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'6,600 மாணவருக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு'
/
'6,600 மாணவருக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு'
'6,600 மாணவருக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு'
'6,600 மாணவருக்கு ரூ.128 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு'
ADDED : அக் 09, 2025 01:22 AM
சேலம் :சேலம், தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில், மாவட்ட அளவில் கல்வி கடன் மேளா, நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
அனைத்து மாணவ, மாணவியருக்கும் பயனளிக்கும்படி, வட்டார அளவில் கல்வி கடன் மேளா நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டில், 4,738 மாணவ, மாணவியருக்கு, 109 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 6,600 மாணவ, மாணவியருக்கு, 128 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், சேலம் கோட்டத்துக்குட்பட்ட, 418 மாணவர்களுக்கு உடனடி நடவடிக்கையாக, 16.51 கோடி
ரூபாய் கல்வி கடனுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி விண்ணப்பங்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கடன் பெற, அனைத்து கல்லுாரிகளுக்கும், பி.எம்.வித்யாலட்சுமி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட வங்கிகளில், உரிமை கோரப்படாத வைப்புத்தொகை கணக்கிற்கான முகாமை தொடங்கி