/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
' உருக்காலையில் தீ தடுப்பு ஒத்திகை
/
' உருக்காலையில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : அக் 09, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், உருக்காலை யில் உள்ள, எல்.பி.ஜி., சேமிப்பு பகுதியில், அவசரகால பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்.பி.ஜி., வாயு கசிவு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அதன் அதிகாரிகள் குழு முன்னிலையில், உருக்காலையில் உள்ள கவளங்கள் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.
பின் விளக்க கூட்டத்தின்போது, உதவி இயக்குனர், அனைத்து துறையின் ஒருங்கிணைந்த முயற்சியை பாராட்டினார். மேலும் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். தலைமை பொது மேலாளர், பொறுப்பு டேனியல்(பணிகள்), வழிநடத்தி, ஒத்திகை செயலில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.