/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., சார்பில் கையெழுத்து இயக்கம்
/
காங்., சார்பில் கையெழுத்து இயக்கம்
ADDED : அக் 09, 2025 01:14 AM
சேலம், ஓட்டுகளை திருடும், பா.ஜ., அரசு பதவி விலக கோரி, சேலம் மாநகர் காங்., சார்பில், சூரமங்கலம் உழவர் சந்தை அருகே, கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஓட்டு திருட்டு குறித்து விரிவாக எடுத்துரைத்து, கட்சியினருடன் இணைந்து மக்களிடம் கையெழுத்துகளை பெற்றனர்.
இதுகுறித்து தங்கபாலு கூறுகையில், ''பா.ஜ., அரசு, ஓட்டு திருட்டில் ஈடுபட்டு, ஜனநாயக விரோதபோக்கை கையாண்டு வருகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவும், மக்களுக்காக ஓட்டுரிமை போராட்டம் நடத்தி, வீடுகள் தோறும் சென்று பிரசாரம் செய்து, அதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்,'' என்றார்.
பொருளாளர் ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.