/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரூரில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு காங்., ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கல்

ADDED : அக் 09, 2025 01:13 AM
அயோத்தியாப்பட்டணம், அயோத்தியாப்பட்டணம், வலசையூர், தமிழ்தாய் காலனியை சேர்ந்த, பெரியசாமி மகன் ஆனந்த், 26. சென்ட்ரிங் கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம், 27ல் கரூரில் நடந்த விஜய் பிரசார நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் காங்., கட்சியை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, நேற்று மதியம், ஆனந்த் வீட்டுக்கு சென்று பெரியசாமி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து காங்., சார்பில், 2.50 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, துணைத்தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், வட்டார தலைவர் காந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.